குமரியில் இளம் விஞ்ஞானிகளுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குமரி அறிவியல் பேரவை சார்பில், வாழ்க்கை சவால்களும் தீர்வுகளும் ஆய்வுசெய்யும் இளம் விஞ்ஞானிகளுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது

Update: 2024-04-16 11:57 GMT

பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்கள் 

குமரி அறிவியல் பேரவை சார்பில், வாழ்க்கை சவால்களும் தீர்வுகளும் ஆய்வுசெய்யும் இளம் விஞ்ஞானிகளுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம் அருமனை வி.டி.எம் கலை அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹேமாகுமாரி தலைமைவகித்தார். தமிழ்நாடு மின்வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் றோசிலின்கிரேஸ் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலையன் அறிமுகவுரையாற்றினார்.   ஒருங்கிணைப்பாளர் சுனில்குமார் நெறிப்படுத்தினார்.

முதல்வர் ஹேமாகுமாரி கணினி அறிவியல் துறைத்தலைவர் ரஞ்சினி வணிகத் துறைத்தலைவர் ஆர்.வி.வினி பிரதிலா கணிதத்துறை உதவி பேராசிரியர் டி.பி.ரெஜினிமோல், கணிதத்துறை பேராசிரியர் எஸ்.மலர்விழி ஆங்கிலத்துறைத்தலைவர் டாக்டர் ஸ்ரீஹாஸ் ஆகியோர் மதிப்பீடு செய்தார்கள்.

Tags:    

Similar News