ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ தர்ணா போராட்டம்
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி எஸ்டிபிஐ கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
Update: 2024-02-14 15:55 GMT
தர்ணா
ராமநாதபுத்தில்ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு பற்றிய எஸ்டிபிஐ கட்சியின் மாபெரும் தர்ணா போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நடந்து. இதில் SDPI கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல்ஹமீது பச்சை தமிழகம் கட்சியின் நிறுவனர் உதயக்குமார், மாநில செயலாளர் அபுபக்கர்சித்திக் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய மாநில துணைத்தலைவர் அப்துல்ஹமீது பேசியபோது ஹைட் றோகார்பன் திட்டத்தை கைவிடவேண்டும், மக்கள் விரோத மீன்வள திருத்த மசோதா 2021 மத்திய அரசு திரும்பபெறவேண்டும். ராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்ட இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை நிறுத்தவேண்டும். மாநில அரசும் மத்திய அரசும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும் என்றார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.