அறுவை சிகிச்சைக்கு உதவிய எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் அறுவை சிகிச்சைக்காக எஸ்டிபிஐ நெல்லை மாநகர மாவட்ட மருத்துவ அணி செயலாளர் உசேன் ரத்த தானம் செய்தார்.;
Update: 2024-06-05 07:57 GMT
ரத்த தானம் வழங்கிய உசேன்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த அகமது பாரூக் என்ற நபர் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார். அவரின் சிகிச்சைக்கு இரத்தம் தேவைப்பட்ட நிலையில் இன்று (ஜூன் 5) எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட மருத்துவ அணி செயலாளர் உசேன் நேரில் சென்று ரத்ததானம் செய்து அறுவை சிகிச்சைக்கு உதவினார்.இதில் எஸ்டிபிஐ கட்சி மருத்துவ அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.