பாதிக்கப்பட்ட மக்களுக்கு எஸ்டிபிஐ கட்சியினர் உதவி
கனமழையால் பாதிக்கப்பட்ட உலகன்குளம் கிராம பழங்குடியின மக்களுக்கு எஸ்டிபிஐ கட்சி சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
Update: 2024-01-18 08:03 GMT
திருநெல்வேலியில் கடந்த டிசம்பரில் பெய்த கனமழையால் சேரன்மகாதேவி அருகே உள்ள உலகன்குளம் கிராமத்தில் வசித்துவரும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சி சார்பில் 15 நாள்களுக்கு தேவையான உணவுப் பொருள்களை கட்சியின் திருநெல்வேலி புறநகர் மாவட்ட பொதுச்செயலர் களந்தை மீராசா வழங்கினார்.இதில் சேரன்மகாதேவி நகரத் தலைவர் அஹமது தலைமை வகித்தார். வீரவநல்லூர் மைதீன், கட்சியின் விவசாய அணி பொறுப்பாளர் சுரேஷ், பத்தமடை ஷேக், ஷபான், ஜின்னா யூசுப் மங்களா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.