கடல் சீற்றம் : வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.

கொல்லங்கோடு,இரையுமன்துறை பகுதியில் கடல் சீற்றத்தால் தடுப்பு சுவரை தாண்டி ராட்சத அலைகள் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

Update: 2024-04-01 08:20 GMT

வீடுகளுக்குள் புகுந்த கடல் நீர் 

குமரி மாவட்டத்தில் பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். இந்த மாதங்களில் கடல் அலைகள் கரையை கடந்து ஊருக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தும். இதனை தடுக்க பாறாங்கற்கள் மூலம் தூண்டில் வளைவுகள், நேர் கற்கள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.ஆனாலும் ஆண்டுதோறும் கடல் சீற்றத்தின் போது கடல் நீர் ஊருக்குள் புகுவதும், வீடு உள்ளிட்ட கட்டிடங்களை அடித்துச் செல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று மாலை கொல்லங்கோடு, இரையுமன் துறை பகுதியில் கடல்சீற்றம் ஏற்பட்டது. கடலில் ராட்சத அலைகள் எழும்பி அலை தடுப்புச் சுவரை கடந்து கரையோரம் இருந்த 54 வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது.இதனால் அச்சமடைந்த மீனவ மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்தனர். இது போல் கரையோரம் இருந்த கல்லறை தோட்டங்களுக்குள் கடல் நீர் புகுந்து பலத்த சேதங்களை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த கொல்லங்கோடு தீயணைப்பு துறை யினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News