நீதிமன்ற உத்தரவுபடி கோவில் நிலத்தில் உள்ள 73 கடைகளுக்கு சீல்

கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள 73 கடைகளுக்கு நீதிமன்ற உத்தரவுபடி சீல் வைக்கப்பட்டது.

Update: 2024-07-02 08:24 GMT

மதுரையின் மையப் பகுதியாக உள்ள டவுன்ஹால் ரோடு பகுதியில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தை சுற்றிலும் 99 கடைகள் வாடகைத்தார்களாக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுபடி தெப்பக்குளத்தை சுற்றியுள்ள 73 கடைகளுக்கு இந்து அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டுபோட்டு சீல்வைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.

சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெப்பக்குளத்தை சுற்றி மேற்கு, வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்த 99 கடைகளில் 26 கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் மீதியுள்ள 73 கடைகளுக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சீல் வைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

Tags:    

Similar News