தங்கும் விடுதிக்கு சீல் - கால அவகாசம் கேட்டு போராட்டம்

திருப்போரூர் அடுத்த நாவலூரில் உள்ள தனியார் ஆண்கள் தங்கும் விடுதிக்கு சீல் வைக்க கால அவகாசம் வழங்கக்கோரி அதில் தங்கியிருந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-31 09:58 GMT
 கால அவகாசம் கேட்டு போராட்டம்

செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் அடுத்த, நாவலூரில் தனியார் ஆண்கள் தங்கும் விடுதி உள்ளது. இவை குத்தகை அடிப்படையில் இயங்கி வருகிறது. விடுதி உரிமையாளருக்கும், குத்தகை எடுத்தவருக்கும் குத்தகை நீட்டிப்பு, வாடகை விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த விடுதியில் ஐ. டி. , ஊழியர்கள், மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இந்நிலையில், முறையான அரசு அனுமதி, உரிமம் இல்லாமல் விடுதி இயங்கி வருவதாக திருப்போரூர் தாசில்தாருக்கு புகார் வந்தது.

புகாரின் அடிப்படையில் திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி மேற்கண்ட விடுதிக்கு நேற்று சென்று ஆய்வு செய்தார். விடுதியில் தங்கியிருந்த 30க்கும் மேற்பட்டோர்களை விடுதியில் இருந்து வெளியேற்றி விடுதிக்கு சீல் வைத்தார். இதனால் தங்கும் விடுதி அசோசியேஷன் மற்றும் தங்கியிருந்த ஐ. டி. , ஊழியர்கள் கால அவகாசம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தாழம்பூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி தற்காலிகமாக உடைமைகளை எடுத்துக் கொள்ள அனுமதித்தனர். மேலும், அப்பகுதி சமுதாய நலக்கூடத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் அரசு சார்பில் செய்யப்பட்டது. எனினும் சமுதாய நலக்கூடத்தில் யாரும் தங்கவில்லை தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

Tags:    

Similar News