வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகள் சீல் வைப்பு

தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்கு செலுத்திய பெட்டிகளை பாதுகாப்பாக வாக்கு என்னும் மையத்தில் வைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது

Update: 2024-04-20 07:03 GMT
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுக்காப்பறையில் சீல் வைக்கப்பட்டது 

தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளின் நேற்று வாக்குப்பதிவு முடிவு பெற்றதை அடுத்து 6 சட்டமன்ற தொகுதிகள் உட்பட்ட வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டு அதை போலீசார் பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணும் மையமான தேனி அருகே உள்ள கொடிவிலார்பட்டியில் தனியார் கல்லூரிக்கு வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டது.

பின்னர் தனி அறையில் வாக்கு பெட்டிகளை அந்தந்த வரிசைக்கு ஏற்ப வைக்கப்பட்டு பின்னர் அறைக்கு பூட்டு போட்டு சீல் வைக்கும் பணி நடைபெற்றது.  தேனி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்ட அறை மூடப்பட்டு பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் பூட்டுக்கு மட்டும் சீல் வைக்காமல் கதவில் போடப்பட்டுள்ள ஆணிகளுக்கு மேல் மற்றும் அறையின் மின்சார பெட்டிக்கு சீல் வைக்க வேண்டும் என அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர் இதை அடுத்து இரண்டிற்கும் சீல் வைக்கப்பட்டது.

Tags:    

Similar News