கன்னியாகுமரியில் கடல்நீர் உள்வாங்கியது: படகு சேவை நிறுத்தம் !

குமாரி சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே கடல்நீர்மட்டம் சீரான பின்னரே படகு சேவை துவங்குவது பற்றி அறிவிக்கப்படும் என பூம்புகார் கப்பல் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.;

Update: 2024-07-08 10:48 GMT
கன்னியாகுமரியில் கடல்நீர் உள்வாங்கியது: படகு சேவை நிறுத்தம் !

படகு சேவை நிறுத்தம் 

  • whatsapp icon
கன்னியாகுமரி கடற்கரையானது உலக புகழ்பெற்ற சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது. இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள நிலையில் தினமும் இங்கு ஏராளமான பொதுமக்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இன்னும் சில வெளிநாட்டவர்களும் தினம்தோறும் வந்து செல்கின்றனர்.     அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து விட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடலின் சீற்றம் அதிகமாக இருந்து வந்த நிலையில் இன்று காலை முதல் சுமார் 20 அடிக்கு கடல் உள்வாங்கியது. மேலும், கடலில் உள்ள பாறைகள் வெளியே தெரிந்தது. இதன் காரணமாக குமாரி சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே கடல்நீர்மட்டம் சீரான பின்னரே படகு சேவை துவங்குவது பற்றி அறிவிக்கப்படும் என பூம்புகார் கப்பல் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News