சாத்தூரில் பரப்புரையில் ஈடுபட்ட சீமான்

சாத்தூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார்.

Update: 2024-03-30 01:10 GMT
சாத்தூரில் பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் மருத்துவர் கௌசிக்கை ஆதரித்து சாத்தூர் முக்ராந்தல் பகுதியில் நாம் தமிழர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது மக்கள் மத்தியில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 150 கோடி முதலீடு செய்து தேர்தலில் நின்று வெல்ல முடியும் என்றால் படித்தவர்கள் பண்பு உள்ளவர்கள் நாட்டை தன் உயிருக்கு மேலாக நேசிப்பவர்கள் எப்படி வர முடியும் என சீமான் கேள்வி எழுப்பினார் கற்றவர்கள் வர முடியவில்லை அந்த இடத்தை கயவர்கள் நிரப்புகிறார்கள் என விமர்சனம் செய்தார்.

மேலும் பேசிய சீமான் தமிழகத்தில் வாக்குக்கு காசு கொடுக்கும் முறை இன்றும் தொடர்கிறது என்றார். மேலும் தேர்தலில் போட்டியிடு வதற்கு வைப்பு (டெபாசிட்) தொகைக்கு பணமில்லாமல் இருக்கும் எங்களின் வாகனங்களை வரும் வழியில் சோதனை செய்கிறார்கள் ஆனால் தெரு தெருவாய் வாக்குக்கு காசு கொடுப்பவர்களை வேடிக்கை பார்க்கிறார்கள் என விமர்சனம் செய்தார். மேலும் பேசிய சீமான் மாற்று அரசியல் என நாங்கள் பேசுவது ஒரு வேட்பாளர் ஒட்டுக்கு காசு கொடுத்தார் என்று தெரிந்தால் அவரை பிடித்தால் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை என்ற நிலையை உருவாக்குவது தான் இங்கே அரசியல் மாற்றம் ஆகும் என்றார். மேலும் இந்த சூழலை மாற்ற வேண்டும் என்று சொல்கிறோம் அது தான் அடிப்படை அரசியல் மாற்றம் என்று சொல்கிறோம் என்றார் மேலும் பேசிய சீமான் உங்கள் இடத்தில் இருக்கின்ற வலிமை மிக்க ஒரு ஆயுதம் உங்கள் வாக்கு தான் அதை அநீதிக்கு எதிராக நீங்கள் தூக்க வேண்டும் என்றார்.

மேலும் பேசிய சீமான் தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை எனவும் நான் செல்கின்ற இடங்களில் ஏராளமான மனுக்களை பொதுமக்கள் என்னிடம் தருகிறார்கள் என்றார்.மேலும் பேசிய சீமான் தமிழகத்தில் ஆசிரியர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் மாணவர்கள் மற்றும் மீனவர்கள் விவசாயிகள் போராடுகிறார்கள் எனவும் எல்லா போராட்டங்களிலும் அதில் உள்ள பிரச்சனைகளுக்கு முதல் குரலாக இந்த சீமான் இருந்திருக்கிறேன் என்றார்.

மேலும் பேசிய சீமான் இப்போது இது நம் நாட்டுக்கு பிரச்சனை நம் நாட்டில் உள்ள வீட்டுக்கும் பிரச்சனை இப்போது நீங்கள் என்னோடு நிற்க வேண்டிய தருணம் இந்த பிரச்சனைகளுக்கு முற்று வைக்க மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.மேலும் பேசிய சீமான் நீங்கள் பாஜகவுக்கு பலமுறை வாய்ப்பு. காங்கிரஸ் மற்றும் அதிமுகவிற்கு திமுகவிற்கு வாக்குகளை செலுத்தி செலுத்தி பலமுறை வாய்ப்பு கொடுத்து விட்டீர்கள் ஒரு முறை உங்கள் பிள்ளைகளுக்கு மைக் சின்னத்தில் வாக்கு செலுத்த வேண்டும் என சீமான் பிரச்சாரம் செய்தார்.

Tags:    

Similar News