பேரி கார்டில் பைக் மோதி விபத்து - காவலர் பலி

சீர்காழி அருகே பேரிகார்டில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காவலர் உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி மீனா நேரில் விசாரணை மேற்கொண்டார்.;

Update: 2024-03-10 02:20 GMT

ராஜேஷ்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (34) இவர் நாகப்பட்டினம் மாவட்டம் வெளிபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். தற்போது வாஞ்சூர் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராஜேஷ் இரவு தனது தம்பி ராஜ்குமார் உடன் இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றுள்ளார். திறக்கப்படாத பைபாஸ் மேம்பாலத்தில் சென்றபோது நத்தம் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த பேரி கார்டில் மோதி பலத்த காயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இவரது தம்பி ராஜ்குமார் படுகாயத்துடன் சீர்காழி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காவலர் உயிர் இழந்தது குறித்து தகவல் அறிந்து உடனடியாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா சம்பவ இடத்திற்கு சென்று சம்பவம் குறித்து கேட்டறிந்தார்

Tags:    

Similar News