மணல் திருட்டு: லாரி பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம், வி.லெட்சுமிபுரத்தில் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-06-17 04:23 GMT
மணல் கடத்தல்
திருமயம் அருகே வி.லெட்சுமிபுரத்தில் அரசு அனுமதியின்றி லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக பனையப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் அங்கு சென்றபோது பர்மிட் ஏது மின்றி ஒரு லாரியில் மணல் ஏற்றப்பட்டுகொண்டி ருந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவர் முருகேசன், கிளீனர்கள் அஜித்குமார், ஜோதி ஆகி யோரை கைது செய்த போலீசார் லாரியையும் பறிமு தல் செய்து விசாரித்து வருகின்றனர்.