செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழம் பறிமுதல்
செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் வெங்கடேசன் அதிரடியாக பறிமுதல் செய்தார்.
Update: 2024-05-15 08:40 GMT
செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழம் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் வெங்கடேசன் அதிரடி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சரியோ அவர்களின் உத்தரவின் பெயரில் கிருஷ்ணகிரி மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர் இந்த ஆய்வில் கால்சியம் கார்பைடு கற்கள் மற்றும் செயற்கை வேதிப்பொருட்கள் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யும் 12 குடோன்கள் கண்டறியப்பட்டு குடோன் களில் சேர்க்கை முறையில் கார்ப்பரேட் கற்கள் வைத்து விற்பனை செய்த சுமார் 86 கிலோ மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் வெங்கடேசன் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.