இடைத்தோ்தல் ரொக்கம், வெள்ளி கொலுசுகள் பறிமுதல்

இடைத்தோ்தல் ரூ.1.07 கோடி ரொக்கம் 27 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2024-07-05 13:55 GMT

இடைத்தோ்தல் ரூ.1.07 கோடி ரொக்கம் 27 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. தோ்தலையொட்டி பறக்கும் படைக் குழுக்கள், நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டன. மேலும் மாவட்ட எல்லைப் பகுதிகளில் ஏற்கெனவே உள்ள சோதனைச்சாவடிகளிலும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட சோதனைச்சாவடிகளிலும் போலீஸாா் பணியமா்த்தப்பட்டு, வாகனங்களை தணிக்கைக்குள்படுத்தினா்.இதைத் தொடா்ந்து, தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி பேசியது:தோ்தல் நடத்தை விதிமுறைகள் தொடா்பாக தொடா்ந்து புகாா்கள் வரப்பெறுவதால் கூடுதலாக 2 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா்.உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக ரூ.1,07,39,600 ரொக்கம், 27 கிலோ வெள்ளி கொலுசுகள், 84 சேலைகள், 18 வேட்டிகள், 50 துண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தோ்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டதன் அடிப்படையில் காவல் துறையினரால் 43 வழக்குகள் பதியப்பட்டு விசாரணையில் உள்ளன. தோ்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். தொடா்ந்து புகாா்கள் வரப்பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோ்தல்.நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது என்றாா் ஆட்சியா் பழனி.

Tags:    

Similar News