விமானப் பயணி கடத்திவந்த ஜிபிஎஸ் கருவி பறிமுதல்
கனடா நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட அரசால் தடைசெய்யப்பட்ட ஜிபிஎஸ் கருவியை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.;
Update: 2024-03-01 02:31 GMT
திருச்சி விமான நிலையம்
கனடாவிலிருந்து இலங்கை வழியாக வியாழக்கிழமை திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை, விமான நிலைய சுங்கத்துறையினா் வழக்கம்போல் சோதனை மேற்கொண்டனா். அப்போது கனடாவில் இருந்து வந்த ஆண் பயணி ஒருவா், அரசால் தடை செய்யப்பட்ட ஜிபிஎஸ் கருவியைக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கருவியைப் பறிமுதல் செய்த சுங்கத் துறையினா், கனடா குடியுரிமை பெற்ற அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.