சட்டவிரோதமாக செம்மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

மார்த்தாண்டம் அருகே சட்ட விரோதமாக செம்மண் கடத்தல் வாகனங்கள் பறிமுதல் செய்து 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-16 14:01 GMT

சட்டவிரோதமாக செம்மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

மார்த்தாண்டம் அருகே பம்மம் கல்லுகட்டி பகுதியில் அனுமதி இன்றி செம்மண் கடத்துவதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது அங்கு நின்ற 5 பேர் கொண்ட கும்பலை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு அனுமதியின்றி செம்மண் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு நின்ற 3 டெம்போ மற்றும் 2 ஜேசிபி. யையும் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் 5 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News