கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்திய மண்ணெண்ணெய் பறிமுதல் !!
நித்திரவிளை அருகே கேரளாவுக்கு கடத்திய மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-05-02 06:48 GMT
மண்ணெண்ணெய்
நித்திரவிளை அருகே பாலாமடம் பகுதி வழியாக மீன்பிடி படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை ஆட்டோவில் கேரளாவுக்கு கடத்தி செல்வதாக நித்திரவிளை தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதை அடுத்து போலீசார் பாலாமடம் பகுதியில் வைத்து சம்பந்தப்பட்ட பயணிகள் ஆட்டோ ஒன்றை தடுத்து நிறத்தி சோதனை இட்டனர். அப்போது அந்த ஆட்டோவில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 கேன்களில் 350 லிட்டர் மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டது.
இதை எடுத்து ஆட்டோவையும் மண்ணெண்ணெயையும் பறிமுதல் செய்து நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.