திருப்பூரில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற பணம் பறிமுதல்
திருப்பூரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 3,33,500 ரூபாயை இன்சூரன்ஸ் ஏஜெண்டிடமிருந்து தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-03-21 09:01 GMT
திருப்பூர் டி.கே.டி மில் அருகில் உள்ள செக் போஸ்ட் சோதனையில் கூடுதல் பறக்கும் படை-1, டீம் - B, செல்வ சங்கர் தலைமையில் வாகன தணிக்கையின் போது திருப்பூர் அம்மாபாளையத்தை சேர்ந்த இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஈஸ்வரமூர்த்தி என்பவர் நான்கு சக்கர வாகனத்தினை சோதனை செய்த போது வாகனத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரொக்கம் ரூ.3,33,500 ரூபாய் கொண்டு வந்துள்ளார்.
அதற்குண்டான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டு செல்லலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் கூடுதல் பறக்கும் படை குழு, பறிமுதல் செய்து கருவூலத்திற்கு அனுப்பப்பட்டது.