தெற்கு பொய்கை நல்லூர் - பரவை சாலையில் பணம் பறிமுதல்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டசபை தொகுதியை சேர்ந்த தெற்கு பொய்கை நல்லூர் - பரவை சாலையில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ 51 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.;

Update: 2024-04-16 16:46 GMT

கோப்பு படம் 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டசபை தொகுதியை சேர்ந்த தெற்கு பொய்கை நல்லூர் - பரவை சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் வந்த பாப்பா கோவில் பெரியநரியங்குடி கிராம ம், மேலத்தெருவை சேர்ந்த ஜெயராமன் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.51ஆயிரம் இருந்தது தெரிய வந்தது .இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரேணுகா தேவி,

தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சந்திரகலா ஆகியோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கீழ்வேளூர் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது

Tags:    

Similar News