வெண்ணைமலை பிரிவு அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல்

வெண்ணைமலை பிரிவு அருகே ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2024-06-03 09:05 GMT
கோப்பு படம் 

கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் உதயகுமாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் ஜூன் 1-ம் தேதி மதியம் 2 மணி அளவில், வெண்ணைமலை பிரிவு சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கரூர் லைட் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த ஜவான் வயது 43 என்பவரை இடை மறித்து சோதனை மேற்கொண்ட போது, கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற விமல் பான் மசாலா 54 பாக்கெட்டுகளும், ஹான்ஸ் 101 பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

சுமார் 34 கிலோ 350 கிராம் எடை கொண்ட, பறிமுதல் செய்யப்பட்ட இந்த புகையிலை பொருட்களின் மதிப்பு ரூபாய் 39,480 என மதிப்பீடு செய்த காவல்துறையினர், புகையிலைப் பொருட்களை விற்பனை கொண்டு சென்ற ஜவானை கைது செய்து,அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து, நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல்துறையினர்.

Tags:    

Similar News