பேருந்தில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

மூங்கில்துறைப்பட்டு அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-03-17 04:10 GMT

கைது செய்யப்பட்டவருடன் போலீசார் 

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சிவன்யா, ராமலிங்கம் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்ட பொழுது பெங்களூரில் இருந்து கள்ளக்குறிச்சி மார்க்கமாக வந்த கர்நாடகா அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்த போது கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டைச் சேர்ந்த கண்ணன் மகன் முருகேஷ் (54) என்பவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பேருந்தில் கடத்தி வந்தவரை கையும் களவுமாக கைது செய்து. அவரிடமிருந்து 1)Hans 510 Pocket, 2)Cool lip 88 pieces என மொத்தம் சுமார் 12 கிலோ(மதிப்பு-12,000/- ரூபாய்) புகையிலை பொருட்கள் கைப்பற்றி கைது செய்தனர்
Tags:    

Similar News