உரிமமின்றி இயக்கப்பட்ட கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த 3 கழிவு நீர் அகற்றும் வாகனங்களை ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் பறிமுதல் செய்து அபராதம் விதித்தார்.
Update: 2024-06-27 02:57 GMT
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் மேற்பார்வையில் 3-வது மண்டலத்திற்குட்பட்ட 35-வது வார்டு ஊத்துக்குளி ரோட்டில் உதவி ஆணையாளர் (மண்டலம் 3&4) வினோத் மற்றும் மாநகர நல அலுவலர் கெளரி சரவணன் ஆகியோர் தொழில் உரிமம் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த 3 கழிவு நீர் அகற்றும் வாகனங்களை ஆய்வு செய்து ரூ. 10,000 அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.