செல்லாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

செல்லாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2023-10-27 12:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவில் தமிழக அறநிலைத்துறைக்கு சொந்தமான 100 வருடங்கள் பழமையான புகழ்பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கோவில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது. கோவில் திருப்பணிக்காக ஏராளமான பொதுமக்கள் நன்கொடைகள் வழங்கினர். திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று 27.10.23 காலை அஷ்டவந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. புண்ணிய நதிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு யாக சாலையில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. முன்னதாக கடந்த 23ம் தேதி முதல் கோவிலில் யாகசாலை பூஜை நடைபெற்று வருகிறது. யாகசாலையில் கணபதிஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமிஹோமம், கோபூஜை, கஜாபூஜை, அஸ்வபூஜை, நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று 27.10.23 காலை 6ம் கால யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை எடுத்து வந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேதமந்திரங்கள் முழங்க அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைகான ஏராளமான பொது மக்கள் வருகை தந்தனர். அதனை தொடர்ந்து புனித நீர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News