சேலத்தில் போதைக்காக மாத்திரைகள் விற்பனை !

வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து வந்த 8 பேரை கைது செய்தனர்.

Update: 2024-07-03 06:07 GMT

வழக்கு

சேலம் 4 ரோடு பகுதியில் கடந்த மாதம் செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேக்கப்படும் படி நின்று கொண்டிருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சந்தைபேட்டை பெரியார் நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, அர்ஜூனன் என்று தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரிந்தது.

மேலும் அவர்கள் மருந்துகளை, சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி சுப்பிரமணி உள்ளிட்ட பலரிடம் வாங்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து சுப்ரமணி (வயது 55), சின்னதிருப்பதியை சேர்ந்த ரமேஷ் (63), கிச்சிப்பாளையம் சரண் (40), அரியானூர் மருந்து கடையில் பணியாற்றிய மல்லூரை சேர்ந்த நிர்மல்ராஜ் (33) உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நிர்மல்ராஜ் வேலைபார்த்த அரியானூரில் உள்ள மருந்து கடை மற்றும் சுப்ரமணி மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிய சேலம் 4 ரோட்டில் உள்ள மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது போதைக்காக மாத்திரைகள் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மருந்து விற்பனை கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் உரிய ஆவணங்கள் இன்றி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரிந்து உள்ளது. இதையடுத்து 2 மருந்து கடை உரிமையாளர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினர்.

Tags:    

Similar News