தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் கருத்தரங்கம்
தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் கருத்தரங்கில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.;
Update: 2024-02-15 03:31 GMT
கருத்தரங்கம்
தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், 'சித்த மருத்துவம் தரவுகள் உடைய மருத்துவம்' என்ற தலைப்பில், ஜன. , 29 - 30ல், இரு நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது. தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனர் பேராசிரியை மீனாகுமாரி, துவக்கி வைத்தார். சென்னை சித்த மருத்துவ கல்லுாரி மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் படிக்கும் முதுகலை சித்த மருத்துவ மாணவர்கள், இந்த மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். 91 ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றன. சிறப்பான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன