சேலம் அரசு மருத்துவமனையில் ரத்தப்போக்கு நோய் குறித்த கருத்தரங்கு
சேலம் அரசு மருத்துவமனையில் ரத்தப்போக்கு நோய் குறித்த கருத்தரங்கை டீன் டாக்டர் மணி துவக்கி வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-10 10:34 GMT
சான்றிதழ் வழங்கல்
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நோயியல் துறை சார்பில் ரத்தப்போக்கு நோய்கள் குறித்த கருத்தரங்கு நேற்று அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. துறைத்தலைவர் சுஜாதா வரவேற்று பேசினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் தனபால் முன்னிலை வகித்தார்.
டீன் மணி தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்து ரத்தப்போக்கு நோய்களை கட்டுப்படுத்துவது மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி விளக்கம் அளித்து பேசினார். தொடர்ந்து ரத்தபோக்கு நோய் குறித்து மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே வினாடி-வினா போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவமனை டீன் டாக்டர் மணி பரிசு வழங்கினார்.