செஞ்சி பஸ் நிலையம் - நாளை மறுநாள் அமைச்சர் நேரு திறந்து வைக்கிறார்.

செஞ்சி பஸ் நிலையத்தை நாளை மறுநாள் அமைச்சர் நேரு திறந்து வைக்கிறார்.;

Update: 2023-12-30 16:38 GMT

செஞ்சி பஸ் நிலையத்தை நாளை மறுநாள் அமைச்சர் நேரு திறந்து வைக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பஸ் நிலையம் ரூ.6 கோடியே 74 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்து கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு திறந்து வைக்க இருக்கிறார், இந்த நிலையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் விரிவாக்கம் செய்யப்பட்ட செஞ்சி பஸ் நிலைய வளா கத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அதிகாரிகளிடம் திறப்பு விழா முன்னேற்பாடு பணிகள் செய்வது குறித்து ஆலோ சனை நடத்தினார். அப்போது செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய செய லாளர் நெடுஞ்செழியன், செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் ஆகி யோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News