செங்கமங்கலம் மூவேந்தர் பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி
செங்கமங்கலம் மூவேந்தர் பள்ளி ப்ளஸ் டூ தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ்டூ தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியில், தேர்வு எழுதிய 151 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இயற்பியல் பாடத்தில் 5 பேரும், வேதியியல் பாடத்தில் 6 பேரும், கணிதப் பாடத்தில் 5 பேரும், விலங்கியல் பாடத்தில் 7 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 15 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில், மாணவர் எம்.விவாசன் 581 மதிப்பெண்களுடன் முதலிடமும், மாணவி ஜெ.இனியா 580 மதிப்பெண்களுடன்,
இரண்டாம் இடமும், மாணவிகள் ஆர்.தேவகாஞ்சனா, கே.அட்சயா ஆகியோர் தலா 578 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பெற்றனர். பள்ளியில் தேர்வு எழுதியவர்களில் 55 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் வழக்குரைஞர் வி.ஏ.டி.சாமியப்பன் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.