ஸ்ரீ வடக்கத்தி அம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு

செங்கோட்டை ஸ்ரீ வடக்கத்தி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2024-05-12 08:58 GMT

திருவிளக்கு பூஜை 

செங்கோட்டை ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவடக்கத்தி அம்மன் கோவில் கொடைவிழா கடந்த மே. 7ஆம் தேதி திருக்கால் நாட்டு வைபவத்துடன் துவங்கியது. அதனைதொடர்ந்து வடக்கத்தி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. இதில் சிறப்பு பூஜையுடன் மாலை 6மணிக்கு கோவில் முன்பு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மே 13ஆம் தேதி மாலை 5மணிக்கு குடிஅழைப்பு இரவு 8மணிக்கு வில்லிசை, நையாண்டி மேளம், சிறப்பு தீபாராதனை, 14ஆம் தேதி காலை 10.30மணிக்கு பால்குடம், பகல் 12மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 3மணிக்கு பொங்கலிடுதல், 5மணிக்கு குற்றால தீர்த்தம் அழைத்து வரல், இரவு 12மணிக்கு அர்த்தசாம பூஜை, பிரசாதம் வழங்குதல், 15ஆம் தேதி மாலை 4மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, 16ஆம் தேதி பகல் 12மணிக்கு கோவில் முன்பு மாபெரும் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை சமுதாய பொறுப்பாளர்கள் சின்னதம்பி யாதவ், ஹரிதாஸ்யாதவ், திருமால்யாதவ், சுப்பிரமணியன்யாதவ், கோபால் யாதவ், பொன்னுச்சீனியாதவ், பொன்னுச்சீனியாதவ், ரவி யாதவ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News