சின்னம் பொருத்தும் பணி

பெரம்பலூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் புகைப்படம் மற்றும் சின்னங்களுடன் கூடிய வேட்பாளர் பட்டியல் பொருத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2024-04-12 11:49 GMT

சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள 270 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தும் வகையில் 648 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 324 கட்டுப்பாட்டுக்கருவிகளும், 351 வாக்காளர் சரிபார்ப்பு கருவிகளும், வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றும் பணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் புகைப்படம் சின்னம் உள்ளிட்டவைகள் அடங்கிய பட்டியல் பொருத்தும் பணியினையும் பெரம்பலூர் பராளுமன்றத்தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கற்பம், குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் .தனலட்சுமி, குளித்தலை வட்டாட்சியர் சுரேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News