சேதுராபட்டியல் விவசாயிகள் பயிற்சி முகாம்!
திருமயம் வட்டார வேளாண்மை துறை சார்பில் அனைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் காரி பருவ விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் சேதுராபட்டியில் நடந்தது.
திருமயம் வட்டார வேளாண்மை துறை சார்பில் அனைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் காரி பருவ விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் சேதுராபட்டியில் நடந்தது. ஊராட்சி தலைவர் மாலா தலைமை வகித்தார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் உமா முன்னிலை வகித்தார்.
அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் நாகராஜன் வரவேற்றார். விவசாயிகள் தரமான விதைகள், பருவம், விதை அளவு, விதை நேர்த்தி, விதை கடினப்படுத்துதல் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகளை கடைப்பிடித்து வேளாண் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மண்ணை வளம்முடையதாக மாற்றுவதற்கு மண்ணில் கரிம சத்துக்களை அதிகரிக்க பசுந்தால் உர பயிர்கள், உயிர் உரங்கள் பண்ணை கழுவுகள் மட்க்கும் குப்பைகள், ஊட்டம் ஏற்றிய தொழு உரங்கள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
ரசாயன உரங்களை படிப்படியாக குறைத்து அங்கக உரம், இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். உயிரினங்கள் பசுந்தாள் பயிர் விதைகள் வேளாண் விரிவாக்கம் மையத்தில் மானிய விலையில் வழங்கப்படுகிறது அதை விவசாயிகள் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.