குலசேகரம் அருகே சொகுசு கார் ஓடையில் கவிழ்ந்து ஏழு பேர் காயம்
குலசேகரம் அருகே சொகுசு கார் ஓடையில் கவிழ்ந்து 7 பேர் காயம் அடைந்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-04 10:46 GMT
ஓடையில் கவிழ்த்த கார்
கேரளா மாநிலத்தை சேர்ந்த 7 பேர் சொகுசு கார் ஒன்றில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். காலையில் கன்னியாகுமரியை சுற்றி பார்த்து விட்டு திற்பரப்பு அருவிக்கு செல்வ தற்காக காரில் சென்றுள்ளனர்.
கார் குலசேகரம் அருகே உள்ள அண்டூர்,இந்திரா நகர் பகுதியில் வைத்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வடிக்காலில் கவிழ்ந்தது.
இதில் காரில் இருந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியினர் அவர்களை மீட்டு குலசேகரத்தில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்