உளுந்தூர்பேட்டை அருகே தொடர் விபத்தில் ஏழு பேர் காயம்

உளுந்தூர்பேட்டை அருகே தொடர் விபத்தில் ஏழு பேர் காயம் அடைந்தனர்.;

Update: 2024-05-09 08:45 GMT

காவல் நிலையம்

உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்த நடந்த விபத்துக்களில் 7 பேர் காயமடைந்தனர். திருவள்ளுர் மாவட்டம், குந்தம்பாக்கத்தில் இருந்து பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் உளுந்துார்பேட்டை தாலுகா சேந்தமங்கலம் அருகே சென்றபோது, பின் தொடர்ந்து வந்த அரசு பஸ் லாரியின் மீது மோதியது. லாரி டிரைவர் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன், பஸ் பயணிகள் மதுரையை சேர்ந்த ஜானகிராமன்,

Advertisement

மருதம்மாள், ரமேஷ், கஜேந்திரகுமார், திருநாவுக்கரசு உட்பட 7 பேர் காயமடைந்தனர். உடன் அவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர். அதேபோல் ஆந்திர மாநிலத்தில் இருந்து குளிர் பானங்களை ஏற்றிக் கொண்டு திருநெல்வேலி நோக்கி டாரஸ் லாரி சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த கெடிலம் ஆற்றுப்பாலத்தில் சென்றபோது,

பின்னல் வந்த தனியார் ஆம்னி பஸ் டாரஸ் லாரி மீது மோதியது. இந்த விபதத்தில் வாகனங்கள் மட்டுமே சேதமடைந்தன. இவ்விரு விபத்துக்கள் குறித்து திருநாவலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News