கடும் வறட்சி: கேர்மாளம், தலமலை வனப்பகுதியில் காட்டுத்தீ

கடும் வறட்சி நிலவுவதால் கேர்மாளம், தலமலை வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருகிறது.

Update: 2024-04-27 10:44 GMT

 சத்தி புலிகள் காப்பகம் வனப்பகுதியில் கோடை வெயில் காரணமாக கடும் வறட்சி நிலவுவதால் தலமலை, கேர்மாளம் காட்டுத்தீ பற்றி எரிவது மலைக்கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. சத்தி புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திம்பம், தலமலை, ஆசனூர், தாளவாடி உள்ளிட்ட மலைப்பகுதிக்கு கோடை காலங்களில் ஏராளமான பயணிகள் வருகை தருவார்கள்.

இங்குள் மலைப்பகுதியில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகாவில் வந்து செல்வார்கள். ஈரோடு மாவட்டத்தில் அதிகளவில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் மாவட்டம் முழுவதும் கடுமையான வெப்பம் நிலவுகிறது.

வெப்பம் காரணமாக இங்குள்ள வனப் பகுதியில் வறட்சி நிலவுகிறது. இதன். காரணமாக வனப்பகுதிகள் அனைத்து மரம், செடி, கொடிகள் காய்ந்து மரங்களில் உள்ள இலைகள் உதிர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் கோடைெ வெயில் தாக்கத்தின் காராணமாக தலமலை, கேர்மாளம் வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பிடித்தது சிறிய அளவில் பிடிப்பத்த தீ காற்றின் வேகத்தில் மள, மளவென பற்றி எரிந்து பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. அந்த தீ மளமளவென பரவி 2வது நாளாக பற்றி எரிந்து வருகிறது.

இதனால் மலைப்பகுயில் புகை மூட்டமாக உள்ளது. பற்றி எரியும் காட்டு தீயில் விலை உயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது. வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News