கழிவுநீர் வெளியேற்றம் - மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 25-வது வார்டு காவிலிபாளையம் ஆனந்தா அவென்யூ பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து கழிவு நீரை வெளியேற்றுபவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2024-06-25 02:47 GMT

ஆனந்தா அவென்யூ பகுதி 

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 25வது வார்டு காவிலிப்பாளையம் ஆனந்தா அவன்யூ பகுதியில் 156 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் செல்வதற்கான பிரதான சாக்கடை கால்வாய் இல்லாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர்  சாலையில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு , வாகன ஓட்டிகள் அப்படியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

புகாரின் அடிப்படையில் திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டல உதவி ஆணையர் கனகராஜ் தலைமையிலான அலுவலர்கள் ஆனந்தா அவன்யூ பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பகுதிக்கு விரைவில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. அதுவரை சாலையில் கழிவு நீர் விடாமல் உறிஞ்சி குழிகள் அமைத்து கழிவுநீர் விட அறிவுறுத்தினர்.  இதனை மீறுபவர்களின் வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் மூலம் சாலையில் தேங்கி இருந்த கழிவு நீரினை மோட்டார் வைத்து அப்புறப்படுத்தினர்.

Tags:    

Similar News