காஞ்சி சாலையில் ஓடும் சாக்கடைநீர்: சுகாதார சீர்கேடு

காஞ்சி ரெட்டிபேட்டை தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-07-01 10:08 GMT

ஆறாக ஒடும் கழிவுநீர்

காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் ஒட்டியுள்ள ரெட்டிபேட்டை தெருவில், டாஸ்மாக் கடை, கருவாடு மண்டி, சிக்கன் சென்டர், உணவகம் மற்றும் குடியிருப்பு வீடுகளும் உள்ளன.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரத்திற்கும் மேலாக சாலையில், கழிவுநீர் வழிந்தோடுகிறது.

இதனால், டாஸ்மாக் கடை செல்லும் மதுப்பிரியர்கள் மட்டுமின்றி இப்பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்வோர், பகுதிவாசிகள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. தொடர்ந்து துர்நாற்றத்துடன் வெளியேறும்கழிவுநீரால்,

இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், மதுபிரியர்கள் கழிவுநீரில் நிலைதடுமாறி விழுந்து செல்கின்றனர். எனவே, ரெட்டிபேட்டை தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்திஉள்ளனர்.

Tags:    

Similar News