"உலகளந்த பெருமாள் அருகே மழைநீருடன் கழிவுநீர் கலப்பு"
கழிவுநீருடன் மழைநீர் கலப்பதைதடுக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;
Update: 2023-12-03 07:52 GMT
மழைநீருடன் கழிவு நீர் கலைப்பு
காஞ்சிபுரம் இரட்டை மண்டபம் சிக்னலில் இருந்து, உலகளந்தப் பெருமாள் கோவில் வழியாக, செங்கழுநீரோடை வீதிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, காஞ்சி காமாட்சியம்மன், உலகளந்த பெருமாள் ஆகிய கோவில்களுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். இது தவிர, வாகன ஓட்டிகளும் செல்கின்றனர். குறிப்பாக, நேற்று பெய்த மழையால், உலகளந்த பெருமாள் கோவில் தேர் நிறுத்துமிடம் அருகே, மேன்ஹோலில் கழிவுநீர் கொப்பளித்து, மழைநீருடன் கலந்து செல்கிறது. இதேபோல, ரங்கசாமி குளம், இரட்டை மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேன்ஹோலில் கழிவுநீர் கொப்பளிக்கிறது. இதை, மாநகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.