சுங்குவார்சத்திரம் பாலத்தின்கீழ் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

சுங்குவார்சத்திரம் மேம்பாலத்தின் கீழ், கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2024-05-28 04:38 GMT

சுங்குவார்சத்திரம் மேம்பாலத்தின் கீழ், கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்


சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாலாஜாபாத் -- கீழச்சேரி நெடுஞ்சாலை இணையும் சுங்குவார்சத்திரம் பகுதியில் மேம்பாலாம் உள்ளது. இந்த சாலை வழியே, வாலாஜாபாத், காஞ்சிபுரம், திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், சுங்குவார்சத்திரம் நான்கு சாலை சந்திப்பில் இயங்கிவரும், உணவகங்கள், இறைச்சிக் கடைகள், சிறுகுறு வணிக கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மேம்பாலத்தின்கீழ், சாலையில் ஆறாக வழிந்தோடுகிறது.

இதனால், அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கழிவுநீரில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சுங்குவார்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கு அவ்வழியாக நடந்து செல்லும், பாதசாரிகள் நோய் தொற்று பரவும் அச்சத்தில் கழிவுநீரில் நடந்து சென்று வருகின்றனர். எனவே, சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை தடுக்க, மேம்பாலத்தின் கீழ், கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News