காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்: கட்டுமான பணி தீவிரம்

குமாரபாளையம் காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-25 11:01 GMT

கட்டுமான பணிகள் தீவிரம் 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரம் 33 வார்டுகளை கொண்டது. ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் தொகை கொண்ட இங்கு, வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் காவிரி ஆற்றில் நேரடியாக கலந்து, குடிநீர் மாசற்றதாக மாறி வருகிறது.

நகரில் உள்ள பல சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரால், குடிநீர் மாசடைகிறது என, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சாயப்பட்டறைகளை இடித்து தரைமட்டமாக்கினர். ஆனால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குறித்து யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலை இருந்து வந்தது. இதனால் குடிநீர் மாசு, அதிகரித்து வரும் நிலை ஏற்பட்டது. இதனால் வீடுகளின் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்ய பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் குமரன், பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது: வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தேக்கி வைக்க பிரம்மாண்டமான டேங்க், கலைமகள் வீதி, நகராட்சி அலுவலகம் முன்பும், அனைத்து பகுதி கழிவுநீரும் குழாய்கள் மூலம் கொண்டு சென்று,

மணிமேகலை தெருவில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இணைக்கப்படும். அங்கிருந்து சுத்திகரிப்பு செய்து தூய்மையான நீர் காவிரியில் திறந்து விடப்படும். ரூ. 16.3 கோடி மதிப்பில் இதற்கான பணிகள் துவங்கி நடந்து வருகிறது.

Tags:    

Similar News