பள்ளப்பட்டியில் ஷரீஅத் ,பிக்ஹு விளக்கக் கூட்டம்

Update: 2023-11-20 07:31 GMT

ஜாமிஆ அல் உஸ்வத்துல் ஹஸனா ஷரீஅத் கல்லூரி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஷரீஅத் & ஃபிக்ஹு விளக்கக் கூட்டத்தின் இறுதி ஆய்வு இன்று மாலை நடைபெறுகிறது. இஸ்லாமிக் ஃபிக்ஹு அகாடமி, இஸ்லாமிய மார்க்கச் சட்ட ஆய்வு கலைக்கூடம் (இந்தியா) சார்பில் பள்ளப்பட்டி ஜாமிஆ அல் உஸ்வத்துல் ஹஸனா ஷரீஅத் கல்லூரியில் நடைபெற்ற 32வது ஃபிக்ஹு கருத்தரங்கின் இறுதி அமர்வு ஷரீஅத் & ஃபிக்ஹு விளக்கக் கூட்டம் இன்று மாலை 6-30-மணி அளவில் ஆண்கள் பங்கேற்க ஹாஜி ஹபீப் ஷாதி மஹாலிலும்,பெண்கள் பங்கேற்க புலவர் ஹபிபுல்லா பழைய மஹாலிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்புரையாற்ற அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவரும், இஸ்லாமிய மார்க்கச் சட்ட ஆய்வுக் கலைக்கூடத்தின் பொதுச்செயலாளருமான, மார்கச் சட்ட வல்லுனர் மௌலானா ஹாலித் ஸைஃபுல்லாஹ் ரஹ்மானி ஹஜ்ரத் தாமத் பரக்காத்துஹு சிறப்புரை ஆற்ற உள்ளார். பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கான பாக்கியமாக கருதி பொதுமக்கள் அனைவரும் திரளாக அவசியம் கலந்து பயன்பெறுமாறு அன்போடு அழைக்கின்றோம் என நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News