செங்கல்பட்டில் கலெக்டர் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்

செங்கல்பட்டில் புதிய கட்டிடத்திற்கு கலெக்டர் அலுவலகம் மாற்றப்பட்டது.

Update: 2023-12-22 14:49 GMT
செங்கல்பட்டில் புதிய கட்டிடத்தில் செயல்பட தொடங்கிய கலெக்டர் அலுவலகம்

காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தனி மாவட்டமாக கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி அறிவித்து அன்று முதல் செங்கல்பட்டு தனி மாவட்டமாக செயல்பட துவங்கியது.

இந்த கட்டிடம், ₹119 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி நடைபெற்றதால் நிர்வாக வசதிக்காக கலெக்டர்‌அலுவலகம் செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று வரை செயல்படு வருகிறது. இந்த அலுவலகத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மேலும், வேளாண் துறை, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம், கூட்டுறவுத்துறை அலுவலகங்கள் தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தன.

தற்போதுள்ள, கலெக்டர் அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால், முக்கிய கோப்புகள் அனைத்தும் பாதுகாப்பு இல்லாமல் இருந்து வந்தன. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் இட நெருக்கடியில் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த கட்டிடங்கள் மழைகாலங்களில் சுவர்களிலும் மேல் கூரையிலும் மழைநீர் கசிந்து, தண்ணீர் தேங்கி நின்று பல முக்கிய கோப்புகள் நனைந்து வீணாகும் சூழல் இருந்து வந்தது. அதனை கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மலையடி வேண்பாக்கம் கிராமத்தில் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான 11 ஏக்கர் 50 சென்ட் நிலத்தில் புதிதாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. அதனை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக கட்டடம் கட்ட ₹134 கோடியே 21 லட்சத்தில் நிதியில் 2020ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் ஜூன் மாதம் 27ம் தேதி தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. அந்த கட்டிட பணியை தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டது. அதே ஆண்டு, அக்.23ம் தேதி புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமான பணி துவங்கப்பட்டது. தொடர்ந்து நடந்து வந்த பணி முழுவதுமாக முடிந்து. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் மாவட்ட நிர்வாகத்திடம் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இந்நிலையில், ஏற்கனவே இயங்கி வரும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் தவிர்த்து, மற்ற துறை அலுவலகங்கள் புதிய கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு செல்ல அதிகாரிகளுக்கு செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார். இதையடுத்து, ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம், நில உதவி இயக்குனர் அலுவலகம், நில அளவை பதிவேடுகள், உதவி இயக்குனர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை, வேளாண், மாவட்ட கருவூல அலுவலகம் மாற்றுத்திறனாளி அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம், முதியோர் உதிவித்தொகை அலுவலகம் உள்ளிட்ட பெரும்பாலான அலுவலகங்கள் நேற்று முதல் புதிய கட்டடத்தில் இயங்க துவங்கின. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'தொல்லியல் துறை மற்றும் அரசு அனுமதி கிடைத்தவுடன் கலெக்டர் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும்' என கூறினர். மேலும், இந்த வளாகத்தில் சாலைப்பணிகள், நிறைய அறைகள் மற்றும் முதன்மை நுழைவு வாயில் இன்னும் பணி முடிவடையாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இழுத்தடிக்கும் தொல்லியல் துறை கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் ஒரு பகுதி தொல்லியல் துறை நோட்டீஸ்' அனுப்பியது. இதனால், தொல்லியல் துறையிடம் தடையில்லா சான்று பெறக்கோரி, மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. அதனை தொடர்ந்து, தொல்லியல் துறையிடம் அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. ஆனால், அனுமதி வழங்காமல் இன்றுவரை தொல்லியல் துறை இழுத்தடித்து வருகிறது.

Tags:    

Similar News