ஷீரடி அருள் சாய்பாபா ஆலய 6-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
Update: 2023-12-03 08:30 GMT
முளைப்பாரி ஊர்வலம்
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உப்போடை பகுதியில் உள்ள ஸ்ரீ ஷீரடி அருள் சாய்பாபா ஆலயத்தில், 6ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடைபெற்றது, இதனை முன்னிட்டு மாலை பெரம்பலூர் சிவன் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து பழைய பேருந்து நிலையம் எளம்பலூர் சாலை வழியாக சாய்பாபா கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் எடுத்து வந்த பால் குடத்தை சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்து சென்றனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.