தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை - உரிமையாளர் கைது
விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் குமாரலிங்காபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த உரிமையாரை கைது செய்தனர்.
Update: 2024-01-08 06:18 GMT
விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி காவல் நிலைய போலீசார் இ குமாரலிங்காபுரம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கிருந்த பெட்டிக்கடையில் சோதனை செய்ததில் அந்த பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பாக்கு பாக்கெட் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 13 ஆயிரத்து ஐநூத்தி நாற்பத்தி ரெண்டு ரூபாய் என மதிப்பிடப்பட்டது. கடை உரிமையாளர் ரஞ்சிதம் என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.