கடையநல்லூரில் கடைகளுக்கு ‘சீல்’

மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் 10க்கும் மேற்பட்ட கடைகள் இருந்த நிலையில் 10 ஆண்டுகளாக வாடகையை வழங்காத கடைகளை சீல் வைத்து கையகப்படுத்த உத்தரவு விட்ட வக்பு வாரிய பொதுவுடைமை அதிகாரி.

Update: 2024-02-01 10:54 GMT
  கடைகளுக்கு ‘சீல்’ 
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தெற்கு அய்யாபுரம் தெருவில் சையது அப்துல்லா கலிபா சாஹிப் தா்கா உள்ளது. இந்த தா்காவை நிா்வகிப்பதில் இரு பிரிவினா் இடையே பிரச்னை ஏற்பட்டதாம். இதனால், 2011ஆம் ஆண்டு முதல் தனித்தனி பிரிவுகளாக செயல்பட்டனா். இந்தத் தா்காவிற்கு மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளின் வாடகையை அப்துல்ரகுமான் என்பவா் வசூலித்து வந்தாராம்; வக்பு வாரியம் அங்கீகரித்த முத்தவல்லியான டாக்டா் மஜித் என்பவரிடம் வாடகையை செலுத்தவில்லையாம். இதுதொடா்பாக, சென்னை வக்பு வாரிய பொதுவுடைமை அதிகாரி முன்னிலையில் விசாரணை செய்ததில் கடந்த 10 ஆண்டுகளாக வாடகையை வழங்காத கடைகளை சீல் வைத்து கையகப்படுத்த உத்தரவு பிறப்பித்தனா். அதன்படி, 10 கடைகளையும் திருநெல்வேலி வக்பு வாரிய கண்காணிப்பாளா் அப்துல்வகாப், ஆய்வாளா்கள் செய்யது ரிஜா, ஷேக் அப்துல்லா, பா்கத்துல்லா ஆகியோா் கடைகளை பூட்டி சீல் வைத்தனா். அப்போது, கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ராஜா, கிராம நிா்வாக அலுவலா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருருந்தனா்.
Tags:    

Similar News