பெண்ணை வீட்டினுள் பூட்டி வைத்ததை தட்டி கேட்ட வாலிபருக்கு கத்துக்குத்து
உக்கடம் பகுதியில் பெண்ணை வீட்டினுள் பூட்டி வைத்ததை தட்டி கேட்ட வாலிபரை கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியை சேர்ந்தவர் அஸ்வக் பமாஸ்(24) குனியமுத்தூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.அதே பகுதியில் வசித்து பீடா கடை நடத்தி வரும் சல்மான்(25) மற்றம் அவரது நண்பர்கள் யாசர்,அப்பு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது.இந்த நிலையில் வேலை நிமித்தமாக அஸ்வக் பமாஸ் உதகை சென்றிருந்தபோது அவரது தோழி சஹானாவை சல்மான் வீட்டில் அடைத்து வைத்துள்ளார். சஹானாவின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை அறையில் இருந்து மீட்ட நிலையில் தன்னை உள்ளே வைத்து பூட்டிய சல்மானின் வீட்டிற்கு பூட்டு போட்டுள்ளார்.
வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய சல்மான் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு சஹானாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. உதகையிலிருந்து திரும்பிய அஸ்வக் பமாசிடம் இது குறித்து சஹானா கூறி உள்ளார்.தனது தாயார் மற்றும் சஹானவுடன் சல்மான் வீட்டிற்குச் சென்று இது குறித்து கேட்ட நிலையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் அஸ்வக் பமாஸின் தாயார் மற்றும் சஹானாவுடன் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார்.
திடீரென சல்மான் தான் வைத்து இருந்த கத்தியால் அஸ்வக் பமாஸை தாக்கியதில் தலை,கை,விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டது.இதுகுறித்து அஸ்வக் பமாஸ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார் சல்மான் மற்றும் யாசறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் இச்சம்பவத்தில் தலைமறைவான அப்பு என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.