இந்த ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் !

வாக்காளர் புகைப்பட அட்டை இல்லாதவர்கள் 12 வகையான ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-15 10:07 GMT

வாக்காளர் புகைப்பட அட்டை இல்லாதவர்கள் 12 வகையான ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 வகையான ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என, கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்பு வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக தங்களது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும்.

மேலும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அளிக்க இயலாத வாக்காளர்கள், தங்களின் அடையாளத்தை நிரூபிக்க மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம். அதன்படி ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டுஅட்டை, ஓட்டுனர் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை(பான் கார்டு), தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்), புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்தி வாக்களிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News