மானத்தாளில் ஸ்ரீ வேட்ராய பெருமாள் கோவில் தெப்ப தேர் திருவிழா

Tharamangalam

Update: 2023-12-25 06:18 GMT
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள அருள்மிகு சோரகை மலை ஸ்ரீ வேட்ராய பெருமாள் கோவிலில் வருடா வருடம் வரும் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியை முன்னிட்டு 10க்கும் மேற்பட்ட குக்கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தெப்ப தேர் இழுத்து திருவிழா கொண்டாடுவது வழக்கம். இதன்படி கடந்த சனிக்கிழமை மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சோரகை மலையில் ஸ்ரீ வேட்ராய பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து துவாதசி நாளை முன்னிட்டு தெப்ப தேர் உற்சவம் மற்றும் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில் முன்னதாக பெரிய தேரில் ஸ்ரீ வேட்ராய பெருமாள் சுவாமியும், சின்ன தேரில் சஞ்சீவராயர் சுவாமியும் வீட்டிருக்க மானத்தாள் ஏரியில் ஒரு புறத்தில் மறுபுறம் சென்று அங்கு 2தேர்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து மீண்டும் ஏரி தண்ணீர் வழியாக இரண்டு தேர்களும் இழுத்து கோவில் அருகே உள்ள கரையை வந்திடைந்தது. தொடர்ந்து ஸ்ரீ வேட்ராய பெருமாள் மற்றும் சஞ்சீவிராயர் சுவாமிகளை கோயில் வளாகத்தில் வைத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தர்மகர்த்தாக்கள், அர்சகர்கள், கொத்துகாரர்கள் மானத்தாள் மற்றும் கண்காணிப்பட்டி உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 5ஆயிரம் பக்தர்கள் ஸ்ரீவேட்ராய பெருமாளை வணங்கி சென்றனர்.
Tags:    

Similar News