சித்த - ஹோமியோ மருத்துவர்கள் அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள சித்த மருத்துவர், ஹோமியோ மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா அழைப்பு விடுத்துள்ளார்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-09 05:03 GMT
ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள சித்த மருத்துவர், ஹோமியோ மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா அழைப்பு விடுத்துள்ளார்.ராயவரம், கீழாநிலை ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பட்டப் படிப்பு முடித்த சித்த மருத்துவர்களும், பெருங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பட்ட படிப்பு முடித்த ஹோமியோ மருத்துவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதத் தொகுப்பு ஊதியம் ரூ. 34 ஆயிரம் வழங்கப்படும். கோனாப்பட்டு, பெருங்களூர், கொடும்பாளூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பட்டயப்படிப்பு முடித்த மருந்து வழங்குநர்களும் விண்ணப்பிக்கலாம். தினக்கூலி . 750. கோனாப்பட்டு, வடகாடு, மறமடக்கி, கொடும்பாளூர், சிங்கவனம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், விராலிமலை அரசு மருத்துவமனைக்கும் பல்நோக்குப் பணியாளர்கள் பணியிடத்துக்கு 8- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தினக்கூலி ரூ. 300 வழங்கப்படும்.இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட நிர்வாகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொண்டு, நிரப்பி, பழைய அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அலுவலகத்தில் வரும் ஜூலை 18- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.