விழுப்புரம் அரசு கல்லூரியில் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்
விழுப்புரம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரில், இளையோர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் சார்பில், சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
விழுப்புரம் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரில், இளையோர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் சார்பில், தமிழ் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கணேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தமிழ் துறை தலைவர் கனிமொழி வரவேற்றார். தமிழ் சித்தா மருத்துவமனை சித்த மருத்துவர் சக்திவடிவு, தமிழ் சித்த மருத்துவ விழிப்புணர்வு எனும் தலைப்பில், சிறப்புரையாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதனை தொடர்ந்து, சித்த மருத்துவம் குறித்த கலந்துரையாடல் நடந்தது. கல்லூரி வளாகத்தில் 4 நாட்கள் நடந்த இந்த முகாமில் 2,505 மாணவிகள் பங்குபெற்றனர். இளையோர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் பொறுப்பாளர்கள் பேராசிரியர்கள் சச்சிதானந்தம், கனிமொழி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் சச்சிதானந்தம் நன்றி கூறினார்.