நெல்லையில் சித்த மருத்துவ முகாம்

பாளையங்கோட்டை சீட் அறக்கட்டளையின் சார்பில் சித்த மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2024-01-21 11:39 GMT

சித்த மருத்துவ முகாம்

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சீட் அறக்கட்டளையின் சார்பில் சித்த மருத்துவமனையில் இன்று சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் ரத்தத்தில் சர்க்கரை, இரத்த கொதிப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். பின்னர் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை சீட் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News